எல்லை தாண்டிய பயங்கரவாதம்... இந்தியா, சீனா பாதுகாப்பு துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

 
இந்தியா சீனா
 

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுன் இருவரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த  பேச்சுவார்த்தையின்போது எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.  சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்  பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டான் ஜூன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடரும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தியாவின் இந்த அசைக்க முடியாத உறுதியை அண்டை நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சீனா உடனான உறவில் புதிய சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்கும்படி வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து   ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'கிங்டாவோவில் நடந்த SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டான் ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இருதரப்பு உறவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து   கருத்துப் பரிமாற்றம் நடந்தது.

ராஜ்நாத் சிங்

6 ஆண்டு  இடைவெளிக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டதில் எனது மகிழ்ச்சி.  இந்த நேர்மறையான உத்வேகத்தைப் பேணுவதும், இருதரப்பு உறவில் புதிய சிக்கல்களைச் சேர்ப்பதைத் தவிர்ப்பதும் இரு தரப்பினரின் கடமையாகும்.' எனத்  தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டில், கிழக்கு லடாக் ராணுவ மோதல் மற்றும் கொடிய கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும்,  சீனாவுக்கும் இடையேயான  உறவுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது