மாலத்தீவுக்கு 12 அதிவிரைவு படகுகள்... இந்தியா உறுதி!

 
மாலத்தீவு

மாலத்தீவுக்கு 12 அதிவிரைவு படகுகள் கட்டமைக்க தேவையான உதவிகளை இந்தியா வழங்கும் என உறுதியளித்துள்ளது. இந்திய தூதர் ஜி. பாலசுப்பிரமணியம் அளித்த தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் இந்தியா–மாலத்தீவு இடையே 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் கடனுதவி, அதிவிரைவு படகுகள் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. இரு நாடுகளும் பாதுகாப்பு மற்றும் கடல் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மொஹம்மது மொய்சூ கடந்த 2024 அக்டோபரில் இந்தியா வந்தார். அதனைத் தொடர்ந்து 2025 ஜூலையில் நரேந்திர மோடி மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளின் உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!