யு-19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷியின் சூப்பர் சதம்... யுஎஇ மீது இந்தியா அதிரடி!
துபாயில் நடைபெறும் யு-19 ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் இந்தியா ரன் மழை பொழிந்து வருகிறது. டாஸ் வென்ற யுஎஇ, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால் அதுவே அவர்கள் மீது திரும்ப தாக்கியது.தொடக்கத்தில் ஆயுஷ் மாத்ரே 4 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆனால் அதற்குப் பிறகு வைபவ் சூர்யவன்ஷியும் ஆரோன் ஜார்ஜும் கிரீஸில் தீவிர தாக்குதல் நடத்தினர். இருவரும் சேர்ந்தே யுஎஇ பந்து வீச்சை சிதறடித்தனர்.
Is Vaibhav Sooryavanshi even real? 🥵
— Sony Sports Network (@SonySportsNetwk) December 12, 2025
Blink… and he’s already at a hundred 🔥
Watch #INDvUAE at the #DPWorldMensU19AsiaCup2025 LIVE NOW, on Sony Sports Network TV channels & Sony LIV!#SonySportsNetwork #SonyLIV pic.twitter.com/NXrE661G5r
இந்நேரத்தில், வைபவ் சூர்யவன்ஷி பறக்கும் பந்துகளை எல்லாம் எல்லைக்கு அப்பால் தூக்கி அடித்து அதிரடி சதம் விளாசினார். அவர் 140 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார். அவருக்கு துணையாக, ஆரோன் ஜார்ஜ் 68 ரன்கள் எடுத்துள்ளார். 27 ஓவர்களில் இந்தியா 220/1 என வலுவான நிலைப்பாட்டில் குவிந்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள யு-19 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக இந்த ஆசிய கோப்பை அமைக்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் இந்த தொடக்கப் பதிவு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
