ஒரு நாள் தரவரிசையில் பின் தங்கிய இந்தியா...ஆஸ்திரேலியா முதலிடம்!

 
ஆஸ்திரேலியா இந்தியா

இந்தியா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. 2020 மே மாதம் முதல் 2022 மே மாதம் வரை நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் 50 சதவீதமும், நடப்பு சீசன் போட்டிகளை முழுவதுமாகவும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையிலும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 
வருடாந்திர தரவரிசைப் பட்டியலில் டி20யில்  இந்திய அணி முதலிடத்திலும் , இங்கிலாந்து அணி 2வது இடத்திலும் உள்ளது.  தற்போது ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையை வெளியிட்டது.

இந்தியா டெஸ்ட்

இதில், இந்தியா 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா  118 புள்ளிகளுடன் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.  116 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 2 வது இடத்திலும் 115 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதால் 2 வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியதில்  ஒரு நாள் போட்டிகளில்  இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றது. ஓர் ஆட்டத்தில் முடிவில்லை.

இந்தியா

இதனால், டி20 தொடர் சமன் ஆனது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரை பொறுத்தமட்டில், பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து வீழ்த்தியது. நியூசிலாந்து 104 ரேட்டிங்குடன் 4வது இடத்திலும், இங்கிலாந்து 101 ரேங்கிங்குடன் 5வது இடத்திலும் உள்ளன. 6 வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 7 வது இடத்தில்  வங்கதேசமும், 8வது இடத்தில் ஆப்கானிஸ்தானும், 9 வது இடத்தில் இலங்கையும், 10 வது இடத்தில்  வெஸ்ட் இண்டீசும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web