52,000 பேர் பலி... இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே இந்தியா தான்… பரபரப்பு குற்றச்சாட்டு!

அமெரிக்க தேசிய உளவு பிரிவு இந்தியா குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியா மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்துள்ளது. அதன்படி ஃபெண்டாலின் தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு சட்ட விரோதமாக விநியோகம் செய்யப்படுவதாகவும் அமெரிக்கா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
போதை பொருள் பயன்பாடு என்பது கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை பயன்படுத்தும் போது மக்கள் போதைக்கு அடிமையாகி அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . குறிப்பாக ஃபெண்டானில் போதை பொருளை அதிகம் எடுத்துக்கொண்ட காரணத்தினால் 2024 அக்டோபர் மாதம் வரை அமெரிக்காவில் 52000 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இதனால் போதைபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக சட்டவிரோத போதை பொருள் கடத்தலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக போதைப்பொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களை தயாரிக்கும் இந்தியா மற்றும் சீனா மீது அமெரிக்கா அதிபர் டிரம்ப் அதிக வரி விதிக்கப்படும் எனக் கூறியுள்ளார்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!