இந்திய-நேபாள எல்லை 3 நாட்களுக்கு மூடல்!

 
இந்தியா நேபாளம்

நேபாளத்தில் மார்ச் 5 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாங்கே மாவட்டத்திலுள்ள எல்லைப் புறக்காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

மார்ச் 2 நள்ளிரவு முதல் மார்ச் 5 நள்ளிரவு வரை எல்லை மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த காலத்தில் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளும் நிறுத்தப்படுகின்றன. இருப்பினும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் முக்கிய பொருட்களின் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாள ஆவணங்கள் தீவிரமாக சரிபார்க்கப்பட்ட பிறகே அவசர தேவைக்காக பயணிகள் அனுமதிக்கப்படுவர். தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு இருநாட்டு மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!