சீன வணிகர்களுக்கு இந்தியாவின் புதிய இ-விசா!

 
இவிசா

சீன வணிகர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்தியா மின்னணு வணிக விசாவை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த புதிய இ-விசா நடைமுறைக்கு வந்துள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு வர விரும்பும் சீன வணிகர்களுக்கு வசதி அதிகரிக்கும்.

இந்த இ-வணிக விசாவுக்கு தூதரகத்துக்கு நேரில் செல்லாமலும், முகவர்கள் உதவி பெறாமலும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். வணிக நோக்கில் இந்தியா வர விசா தேவை அதிகரித்துள்ளதால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பின்னர் சுமார் 45 முதல் 50 நாட்களில் விசா வழங்கப்படும்.

இந்த விசாவின் மூலம் 6 மாதங்கள் இந்தியாவில் தங்க அனுமதி அளிக்கப்படும். வணிக கருவிகள் நிறுவுதல், தர பரிசோதனை, பராமரிப்பு பணிகள், தயாரிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக விண்ணப்பிக்கலாம். indianvisaonline.gov.in மற்றும் nsws.gov.in இணையதளங்களில் இதற்கான விண்ணப்பம் செய்யலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!