இன்று முதல் டி20… இந்தியா–நியூசிலாந்து மோதல்!

 
india

 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராக உள்ளது. அதே நேரத்தில் டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் தலைமையில் ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், ரிங்கு சிங், பும்ரா, வருண் சக்ரவர்த்தி இடம் பெறலாம். நியூசிலாந்து அணியில் டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர் தலைமையில் களமிறங்குகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!