ஜப்பானை முந்திய இந்தியா… உலக பொருளாதாரத்தில் 4வது இடம்!

 
ஜிடிபி

ஜப்பானை பின்னுக்குத்தள்ளி, உலகின் 4வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் வளர்ச்சி தொடர்ந்தால், 2030க்குள் ஜெர்மனியையும் இந்தியா முந்தும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.18 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக பொருளாதார தரவரிசையில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரான வளர்ச்சி தொடர்ந்தால், அடுத்த 2.5 முதல் 3 ஆண்டுகளில் ஜெர்மனியையும் இந்தியா முந்தும் என கூறப்படுகிறது.

ஜூலை–செப்டம்பர் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அது 7.8 சதவீதமாக இருந்தது. உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் இந்தியாவின் மீள்தன்மையை இது காட்டுகிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!