எண்ணெய் நிறுத்தம் குறித்து இந்தியா அறிவிக்கவில்லை... ரஷியா அதிரடி!
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் நிறுத்தி, அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிடம் இருந்து அதிகளவில் எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த அறிவிப்புக்கு பதிலளித்த ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்தியா ரஷியாவிடம் மட்டும் எண்ணெய் வாங்குவதில்லை என்று தெரிவித்தார். பல்வேறு நாடுகளிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவது வழக்கமான செயலாகும் என அவர் கூறினார்.

மேலும், ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என அவர் விளக்கினார். இந்தியாவுக்கு விருப்பமான நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கும் முழு சுதந்திரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
