15 டன் நிவாரண பொருட்களை மியான்மருக்கு அனுப்பி வைத்த இந்தியா!

 
15 டன் நிவாரண பொருட்களை மியான்மருக்கு அனுப்பி வைத்த  இந்தியா!

மியான்மர் மண்டலாவில்  நேற்று  7.7  மற்றும் 6.4 ரிக்டர் என அடுத்தடுத்து 2  நிலநடுக்கங்கள்   ஏற்பட்டன.  இதனால் மியான்மரில் 5 நகரங்களில் உள்ள கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்தன.  கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

மியான்மர்

இந்த நிலநடுக்க அதிர்வு  வடக்கு தாய்லாந்து முழுவதும், பாங்காக் வரை  உணரப்பட்டது.  முதற்கட்ட தகவலின்படி 144 பேர் உயிரிழந்ததாகவும்  732 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு இருப்பட்தாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று முதலே மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் இன்னும் அதிகரித்த வண்னம் இருக்கிறது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருவதால் உறுதியான தகவல்கள் கிடைப்பதிலும், மற்ற நாடுகள் உதவி செய்வதிலும் சற்று தாமதம் நிலவி வருகிறது.

இதேபோல தாய்லாந்து, பாங்காங்கிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அங்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை அங்கும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாங்காங் கட்டிடத்தில் சிக்கியுள்ள 70க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது.

மியான்மர்

இந்தியா சார்பில் இருந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு உதவிட, சுமார் 15 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் கூடாரங்கள், போர்வைகள், உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதார பொருட்கள், சோலார் விளக்குகள், ஜெனரேட்டர் செட்கள், அத்தியாவசிய மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் கையுறைகள், பருத்தி துணிகள், சிறுநீர் பைகள் போன்றவை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?