இன்று இந்தியா–தென் ஆப்பிரிக்கா டி20 மோதல்... எகிறும் எதிர்பார்ப்பு!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2–0 என கைப்பற்றிய அந்த அணி, ஒருநாள் தொடரை 1–2 என்ற கணக்கில் இழந்தது. இதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களம் காண்கிறது.
இதன்படி இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி இன்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது. இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்புடன் உள்ளன.

சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 18 போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்கா 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
