அமெரிக்க ஒப்பந்தம் தாக்கம்… ரஷிய எண்ணெய் கொள்முதலை குறைக்கத் தொடங்கும் இந்தியா!

 
crude oil
 

 

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்துக்கான செயல்திட்டம் இறுதி செய்யப்பட்ட நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைக்கத் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்கா அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளன. இதன் பின்னணியில், ரஷிய எண்ணெய் கொள்முதல் தொடர்பில் மாற்றங்கள் வரலாம் என கூறப்படுகிறது.

ஓபெக் கச்சா எண்ணெய் க்ரூட் ஆயில்

மத்திய அரசு நேரடியாக உத்தரவு வழங்கவில்லை என்றாலும், ரஷிய எண்ணெய் கொள்முதலை குறைக்க சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக 6 முதல் 8 வாரங்களுக்கு முன்பே எண்ணெய் கொள்முதல் ஆணைகள் வழங்கப்படும். ஏற்கெனவே இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவடைந்த பின், புதிய கொள்முதல்களை ரஷியாவிடம் மேற்கொள்ளாமல் இருக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், எம்ஆர்பிஎல், ஹெச்பிஇஎல் போன்ற நிறுவனங்கள் ரஷிய நிறுவனங்களிடமிருந்து கொள்முதலை நிறுத்தியுள்ளன.

கச்சா

ரஷியா-உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கியது. 2023-ல் தினசரி 21 லட்சம் குவிண்டால் அளவுக்கு இருந்த கொள்முதல், தற்போது 11 லட்சம் குவிண்டாலாக குறைந்துள்ளது. வர்த்தக ஒப்பந்தத்தின் தாக்கத்தால் இது மேலும் 10 லட்சம் குவிண்டாலாக குறைய வாய்ப்பு உள்ளது. இதே நேரத்தில், நயாரா நிறுவனம் மட்டும் சில விலக்குகளுடன் ரஷிய எண்ணெய் கொள்முதலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!