இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி... மளமளவென விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் !

 
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி


 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்துள்ளது. 

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

கில் 127 ரன்களுடனும், பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லீட்சில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட்டில் முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்த்துவிட்டதாக மைதான நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  அதன்படி, 18000 பேர் அமர்ந்து விளையாட்டை கண்டுகளிக்கும் வகையிலான இந்த மைதானத்தில் நேற்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.  

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி

ஆட்டத்தின் 2வது நாளான இன்றும் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டன. நாளை 3ம் நாள் ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. 4ம் நாள் திங்கட்கிழமை ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளில் இதுவரை 13000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக  மைதான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது