நாளை இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் தொடக்கம்... 18 ஆண்டு கால ஏக்கம் தணியுமா?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நாளை தொடங்க இருக்கும் இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் நாளை மாலை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.
4வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடரில் இந்திய அணியின் முதலாவது ஆட்டம் இதுவாக கருதப்படுகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் கடந்த மாதம் டெஸ்டில் இருந்து விடைபெற்றதால் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது.
சீனியர்கள் இல்லாத குறையை சமாளித்து இந்திய அணி எப்படி சாதிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2007ம் ஆண்டு டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. அதன்பின் தொடரை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. அந்த 18 ஆண்டு கால ஏக்கத்தை புதிய கேப்டன் சுப்மன் கில் தணிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!