அனல் பறக்கப் போகுது... துபாய்க்கு முண்டியடிக்கும் ரசிகர்கள்... பிப்.23ல் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி!

 
இந்தியா பாகிஸ்தான்

அனல் பறக்கப் போகுது. துபாய் மொத்த வருவாயையும் அள்ளப் போகுது. இப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் துபாய் ஹோட்டல்களில் முண்டியடிக்க துவங்கியுள்ளனர். பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஒரு நாள் போட்டிகள் நடக்கும் தேதி, பங்கேற்கும் அணிகள், இடம் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தியா பங்கு பெறும் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ள நிலையில், இம்மாதம் 23ம் தேதி துபாயில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுகிறது. 

 பாகிஸ்தானில் நாளை மறுதினம் பிப்ரவரி 19ம் தேதி முதல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் போட்டிகள் துவங்க உள்ளன. இறுதிப் போட்டி வரும் மார்ச் 9ம் தேதி லாகூர் அல்லது துபாயில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் உள்ளன. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ்

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. கராச்சியில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

சாம்பியன்ஸ்

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் இந்தியா இரு முறை சாம்பயன் பட்டம் வென்றுள்ளது. 2017ல் இறுதிப்போட்டியில் தோற்று 2ம் இடம் பிடித்தது. இந்தியா மோதும் வங்கதேசத்துடனான முதல் போட்டி, வரும் 20ம் தேதி நடைபெறும். இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் 23ம் தேதி துபாயில் நடக்கும். அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web