பீகாரை நீக்கினால் தான் இந்தியா வளர்ச்சியடையும்... பள்ளிஆசிரியையின் சர்ச்சைப் பேச்சு!

 
டெல்லி இளம்பெண்

இந்தியாவிலிருந்து பீகார் மாநிலத்தை நீக்கினால் தான் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்று கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஆசிரியை ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

பீகார் மாநிலத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியாக பணிபுரிந்து வருபவர் தீபாலி. இவர் இந்தியாவில் இருந்து பீகாரை நீக்கி விட்டால் வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாறிவிடும் என  சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். இதனையடுத்து பள்ளி நிர்வாகம் அவரை  உடனடியாக வேலை இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது. இது குறித்து அவர்  “இந்தியா முழுவதும் பல ஊர்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருக்கும் நிலையில் ஏதாவது ஒரு ஊரில் என்னை ஆசிரியராக சேர்த்திருக்கலாம். கொல்கத்தாவை பலருக்கும் பிடிக்காது. அங்கு செல்லக்கூட நான் தயாராக தான் இருக்கிறேன்.

என்னுடைய நண்பர்களில் ஒருவர் டார்ஜிலிங்கிலும், ஒருவர் சில்சாரிலும் மற்றொருவர் பெங்களூருவிலும் பணியாரத்தப்பட்டார். ஆனால் என்னை இந்த மோசமான மாநிலத்தில் பணியமர்த்தி விட்டார்கள் என் மீது அவர்களுக்கு என்ன கோபம்.என்னுடைய முதல் பணி என்றும் என் நினைவில் இருக்கும் என்பதால் லடாக்கில் கூட என்னை பணியில் சேர்த்திருக்கலாம்.

தீபாலி

ஒடிசா அல்லது தென்னிந்தியாவிலாவது பணி கொடுத்திருக்கலாம். நான் கேலி செய்யவில்லை. பீகாரின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்பதை நான் இங்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் பார்க்கிறேன். இந்த மக்களுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை. இந்த மாநிலத்தால் தான் இந்தியா இன்னும் வளர்ச்சி அடையவில்லை. ஒரு வேளை பீகாரை இந்தியாவில் இருந்து நீக்கிவிட்டால் வளர்ச்சி அடைந்த நாடாக மாறிவிடும்” எனக் கூறியுள்ளார்.   இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த மாநிலத்தின் எம்பி சாம்பவி சவுத்ரி கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் ஆணியருக்கு கடிதம் எழுத உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web