17 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி ... கொண்டாட்டத்தில் வீரர்கள்!

 
இந்தியா
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியதும், 3 வன்-டே போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சைத் தேர்வு செய்த நிலையில், முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 349 ரன்கள் குவித்தது. விராட் கோலி சிறப்பாக விளையாடி 135 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து ராகுல் 60, ரோகித் 57 ரன்கள் பங்களித்தனர். தென் ஆப்பிரிக்க பவுலர்களில் ஜான்சன், பர்கர், போஷ், பார்ட்மேன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்து 350 ரன்கள் இலக்கை அடைவதற்காக களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 332 ரன்கள் எடுத்தே ஆல்-அவுட் ஆனது. மேத்யூ பிரீட்ஸ்கே 72, மார்கோ ஜான்சன் 70, கார்பின் போஷ் 67 ரன்கள் எடுத்தும், அணியை வெற்றிக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. சிறப்பான ஆட்டத்திற்காக விராட் கோலி மேன் ஆஃப் தி மேட்ச் தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்ததை அடுத்து ஹோட்டலில் கேக் வெட்டி கொண்டாட்டம் நடந்தது. இதில் கேப்டன் ராகுல் கேக் வெட்டும் போது இரவைச்ச சூழலில் அனைவரும் உற்சாகத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், ஆட்ட நாயகன் கோலி அறைக்குள் வந்தபோது கை தட்டிவிட்டு உடனே திரும்பி சென்ற காட்சி வைரலாகி, அவர் கொண்டாட்டத்தை புறக்கணித்தாரா? என்ற கேள்வி எழுந்தது. இதே நேரத்தில் பயிற்சியாளர் கம்பீர் – ரோகித் சர்மா இடையே தீவிரமாக பேசிய காட்சிகளும், கோலி கம்பீரை கவனிக்காமல் சென்றது போல் தோன்றிய இன்னொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் அணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், ரசிகர்கள் சூடான விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!