இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை ட்ரோன் உடைந்த நிலையில் மீட்பு !

 
விமானப்படை ட்ரோன் விமானப்படை ட்ரோன்
 

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டம் ராம்கார் பகுதியில் அமைந்துள்ள இந்தியா–பாகிஸ்தான் எல்லையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஆளில்லா ட்ரோன் ஒன்று உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சட்டார் மைனர் பகுதியில் விவசாய நிலத்தில் இந்த ட்ரோன் சேதமடைந்த நிலையில் கிடந்ததை கவனித்த உள்ளூர் மக்கள் தகவல் அளித்தனர். பின்னர் அங்கு விரைந்த காவல் துறையினர் ட்ரோனை பாதுகாப்பாக மீட்டு தொடக்கக்கட்ட விசாரணையை ஆரம்பித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த விமானப் படை அதிகாரிகள், ட்ரோனை கைப்பற்றி தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். எனினும், அந்த ட்ரோன் எதற்காக பயன்படுத்தப்பட்டது? எவ்வாறு உடைந்தது? போன்ற விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!