விமான விபத்துகளில் உயிரிழந்த இந்தியப் பிரபலங்கள்.. துயரமான பட்டியல்!
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் காலமானார் என்ற அதிர்ச்சிகரமான செய்தியைத் தொடர்ந்து, இந்தியாவில் வான்வழி விபத்துகளில் உயிரிழந்த முக்கிய பிரமுகர்கள் குறித்த பட்டியல் துயரத்தை ஏற்படுத்துகிறது.
இந்திய வரலாற்றில் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய ஆளுமைகள் வான்வழிப் பயணத்தின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது மோசமான வானிலை காரணமாக உயிரிழந்த சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன.

விபத்துகளில் மறைந்த முக்கிய பிரமுகர்கள்:
இன்று காலை நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் (காலமானார்.
விஜய் ருபானி (2025): குஜராத் முன்னாள் முதல்வர்.
பிபின் ராவத் (2021): இந்திய முப்படை தலைமைத் தளபதி (CDS), நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
டோர்ஜி காண்டு (2011): அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர்.
ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி (2009): ஆந்திரப் பிரதேசத்தின் செல்வாக்கு மிக்க முதலமைச்சர், ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்தார்.
சவுந்தர்யா (2004): புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை மற்றும் பாஜக பிரமுகர், தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் போது விமான விபத்தில் சிக்கினார்.
மாதவராவ் சிந்தியா (2001): முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவர்.
என்.வி.என். சோமு (1997): தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர்.
சஞ்சய் காந்தி (1980): முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் மற்றும் அரசியல் தலைவர்.
மோகன் குமாரமங்கலம் (1973): காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்.

மகாராஷ்டிராவின் புனே அருகே இன்று காலை அஜித் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அவரோடு பயணம் செய்த சில அதிகாரிகளும் உயிரிழந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் விஐபி ஹெலிகாப்டர் மற்றும் விமானப் பயணங்களில் பெரும்பாலான விபத்துகள் 'CFIT' எனப்படும், மோசமான வானிலையால் நிலப்பரப்பு அல்லது மலைகளில் மோதுவதாலேயே நடக்கின்றன என வான்வழிப் பாதுகாப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதில் ஜி.எம்.சி. பாலயோகி (முன்னாள் மக்களவைத் தலைவர்) மற்றும் ஓ.பி. ஜிண்டால் (ஹரியானா அமைச்சர்) போன்ற தலைவர்களும் கடந்த காலங்களில் வான்வழி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
