வங்கதேசத்தில் இந்திய துணைத் தூதரகம் மீது நள்ளிரவு கல்வீச்சு!

 
வங்கதேசம்
 

வங்கதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாடி மரணத்தைத் தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. ஹாடிக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறியதாக குற்றம்சாட்டி போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கினர். இந்த பதற்றத்தின் உச்சமாக, நேற்று நள்ளிரவு இந்திய துணைத் தூதரகம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

சட்டோகிராம் பகுதியில் இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டபோதும், சிலர் தூதரக அலுவலகம் மற்றும் துணைத் தூதரின் வீட்டின் மீது கற்களை வீசினர். இந்தியாவுக்கு எதிராகவும், அவாமி லீக், ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுந்தன.

இதற்கு முன், புரோதோம் அலோ, டெய்லி ஸ்டார் நாளிதழ் அலுவலகங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அவாமி லீக் சார்ந்த இடங்களும் தாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மையமாக வைத்து வங்கதேசம் மீண்டும் கலவரச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!