உடனடியா நாட்டை விட்டு வெளியேறுங்க... ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

 
iran iran

 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2  வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்தியக் குடிமக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவுறுத்தலில், ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் தூதரகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விரைவாக நாடு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காகச் சிறப்பு உதவி எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தூதரகத்தின் முன் அனுமதி இன்றி எந்தவொரு சர்வதேச நில எல்லைகளையும் அணுக வேண்டாம் என்றும் இந்தியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது படைகளைத் திரும்பப் பெறுவதாகவும், ஈரானுடனான பதற்றத்தைத் தணிக்க இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, சுமார் 7,500 இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாகப் போர் பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து வெளியேற விரும்புவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது குண்டுவீச்சு அச்சுறுத்தல் தற்காலிகமாகத் தணிந்துள்ளதால், தெற்குப் பகுதிகளிலிருந்து ஆர்மீனிய எல்லை வரையிலான 1,500 கிலோமீட்டர் தூரத்தைப் பயணிகள் பாதுகாப்பாகக் கடக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ்

இதற்கிடையே, மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஏற்கனவே கடந்த 48 மணி நேரமாக இந்தியர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், மின்சார நிலையங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் உள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாயகம் திரும்பத் துடிக்கும் இந்தியர்களுக்காகத் தூதரகம் அனைத்து ஒருங்கிணைப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!