இந்திய போர் விமானம் விபத்து... பைலட் மாயம்!
இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்‑30 எம்.கே.ஐ ரக போர் விமானம் குவாஹாத்தி விமானப்படை தளத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்துடன் இருந்த தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து விமானத்தைத் தேடும் பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர் அசாம் மாநிலத்தின் கார்பி அங்கிலாங் பகுதியில் உள்ள சோக்கி ஹோலா அருகே அந்த போர் விமானம் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் விமானப்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானத்தை இயக்கிய பைலட் மாயமானதாக பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
