அமெரிக்க தலைவா்களுக்கு வழங்கப்பட்ட இந்திய பரிசுகள் பட்டியல் !
அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, இந்திய பிரதமர் மோடி மற்றும் பிற அதிகாரிகள் அமெரிக்க தலைவர்களுக்கு வழங்கிய பரிசுகள் 480 டாலர் (சுமாரா ரூ.44,000) மதிப்பில் தொடங்கி, லட்சக்கணக்கான மதிப்புள்ளவற்றுக்கு மேல் உள்ளன.
-
2023: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மரப்பெட்டி, கழுத்து சால்வை, ஜாடியுடன் கூடிய குங்குமப்பூ, தேநீர் பெட்டி – 562 டாலர் (சுமார் ரூ.51,000).
-
2024: அதிபர் பைடனுக்கு வெள்ளி உலோக ரயில் செட்டை – 7,750 டாலர் (சுமார் ரூ.7 லட்சம்).
-
2024: துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கிருஷ்ண பரமாத்வாவின் ராசலீலா வெள்ளிப் பெட்டி – 1,330 டாலர் (சுமார் ரூ.1.22 லட்சம்).
-
2024: ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு பஷ்மினா சால்வை – 2,969 டாலர் (சுமார் ரூ.2.72 லட்சம்).
-
2022: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினுக்கு வெண்கல நடராஜர் சிலை – 3,700 டாலர் (சுமார் ரூ.3.40 லட்சம்).
-
2024: தேசிய பாதுகாப்பு உதவியாளராக இருந்த ஜேக் சல்லிவனுக்கு காஷ்மீர் பஷ்மினா சால்வை – 599 டாலர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் வழங்கிய பரிசு.
இவை இந்திய–அமெரிக்க உறவுகளின் சிறப்பான பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமான மரியாதை பரிசுகள் ஆகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
