இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவின் கணவர் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 
பி.டி.உஷா

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பி.டி. உஷாவின் கணவர் வி. ஸ்ரீனிவாசன் இன்று அதிகாலை 1  மணியளவில் காலமானார். அவருக்கு வயது 67. அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் திக்கோடியில் உள்ள 'உஷாஸ்' இல்லத்தில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் ஸ்ரீனிவாசன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாகப் பையாலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்த பி.டி. உஷா, தகவலறிந்ததும் உடனடியாக கேரளாவுக்குப் புறப்பட்டுள்ளார். பி.டி. உஷாவின் விளையாட்டு மற்றும் அரசியல் வாழ்க்கையில் ஸ்ரீனிவாசன் ஒரு மிகப்பெரிய தூணாகத் திகழ்ந்தவர்.

பி.டி. உஷா

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி, துணை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றவர். முன்னாள் கபடி வீரரான இவர், விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பி.டி. உஷாவும் ஸ்ரீனிவாசனும் கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விக்னேஷ் உஜ்வல் என்ற மகன் உள்ளார்.

"ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருப்பார், ஆனால் எனது ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் எனது கணவர் இருக்கிறார்" என்று பி.டி. உஷா தனது 30-வது திருமண ஆண்டு விழாவின் போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தது நினைவு கூரத்தக்கது. ஸ்ரீனிவாசனின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி பி.டி. உஷாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீனிவாசன், உஷாவின் தொழில்முறை சாதனைகளுக்கு உந்துசக்தியாக இருந்தவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிடி உஷா

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பலரும் இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரளாவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது. இறுதிச் சடங்குகள் குறித்த அறிவிப்பு பி.டி. உஷா கேரளா வந்தடைந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!