கனடாவில் இந்திய வம்சாவளி பஞ்சாபி இளைஞர் சுட்டுக் கொலை!

 
கனடா
 

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பஞ்சாபி இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் அபோட்ஸ்ஃபோர்ட் நகரில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நவ்பிரீத் தாலிவால் (28) தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஜனவரி 9-ம் தேதி மதியம், அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த நவ்பிரீத்தை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் செயல்படும் குற்றவாளிக் குழுக்களுக்கிடையேயான மோதலின் தொடர்ச்சியாக இந்தக் கொலை நடந்துள்ளதாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், தெற்காசிய மக்களை குறிவைத்து நடைபெறும் பணப்பறிப்பு தொடர்பான கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த கொலை வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கனடா காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல குற்றவாளிக் குழு தலைவர் டோனி பால் இந்த கொலைக்கு பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு நவ்பிரீத்தின் குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்ததாகவும், நவ்பிரீத் போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!