இந்திய பாடல்கள் ரேடியோவில் ஒலிபரப்ப தடை... பாகிஸ்தான் திடீர் உத்தரவு!

 
இந்தியா பாகிஸ்தான்
 

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளங்களில் ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் உலகம் முழுவதுமே  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கொடுமையான செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக  இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.  இந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. 

மோடி பாகிஸ்தான்

இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது. அத்துடன் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது. மேலும் இருநாட்டு அரசுகளும் தங்கள் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்துள்ளன. 

இந்தியா பாகிஸ்தான்

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ரேடியோ நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்து பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர்  அட்டாவுல்லா தரார் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரேடியோ நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கும் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் உத்தரவு வரவேற்கத்தது. இந்த தேசபக்திமிக்க செயல் நாட்டின் ஒற்றுமை உணர்வை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் கண்ணியத்தையும், இறையாண்மையையும் நிலைநிறுத்தும் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் முயற்சியை பாராட்டுகிறோம். தேசிய நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு, ஒற்றுமை, அமைதி மற்றும் தேசபக்தியை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஊடக பங்குதாரர்களின் முயற்சிகள் பெருமை அளிக்கின்றன" எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web