கடல் அலையில் சிக்கி பொறியியல் மாணவி உயிரிழப்பு!

 
சாய் தேஜஸ்வி

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் சசிதர ரெட்டி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் சாய் தேஜஸ்வி கொம்மரெட்டி, இங்கிலாந்தில் விண்வெளி துறையில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். குடும்பத்தினர் தெலங்கானாவில் இருக்கும் நிலையில், அவர் மட்டும் இங்கிலாந்தில் தங்கியிருந்து படித்து வருகிறார்.

தேஜஸ்வி தனது தோழிகளுடன் சேர்ந்து அங்குள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் அனைவரும் கடற்கரையில் குளித்து உற்சாகமாக விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத அலையில் தேஜஸ்வி சிக்கியுள்ளார். அவர் உள்பட 3 பேர் கடுமையான அலையில் சிக்கி கடலுக்குள் இலுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.

சாய் தேஜஸ்வி

இவர்களில் தேஜஸ்வியின் உடலை மீட்பு குழுவினர் முதலில் மீட்டனர். அதற்கடுத்த 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழு தெரிவித்துள்ளது.

தனது மகள் இறப்பு அறிந்து தெலங்கானாவில் உள்ள பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தேஜஸ்வியின் தந்தை சசிதர ரெட்டி கூறுகையில், தேர்வு எழுதிய பின்னர் ஓய்வாக இருப்பதற்காக அவர்கள் கடற்கரைக்குசென்றுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசத்தில் கடல் அலையில் சிக்கி அவர்கள் உயிரிழந்துவிட்டனர். மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் சிலர் எங்களுக்கு நிறைய உதவிகளை செய்தனர், என்றார்.

சாய் தேஜஸ்வி

தேஜஸ்வியின் உடலை இந்தியா கொண்டு வர இருந்த நடைமுறை சிக்கல்களை தீர்க்க உதவினர் என கூறியுள்ளார். இதன்படி, தேஜஸ்வியின் உடல் நாளை (வெள்ளி கிழமை) ஹைதராபாத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!