ஜெர்மனியில் நடந்த தீ விபத்தில் இந்திய மாணவர் பலி!
உயர்கல்விக்காக ஜெர்மனி சென்ற தெலங்கானா மாநில மாணவர், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜங்காவ்ன் மாவட்டத்தைச் சேர்ந்த ஹ்ருதிக் ரெட்டி (25), பெர்லினில் உள்ள தனது குடியிருப்பில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கியுள்ளார். வீடு முழுவதும் புகை சூழ்ந்ததால், உயிருக்கு பயந்து தப்பிக்க முயன்ற அவர், மேல்தளத்திலிருந்து கீழே குதித்தபோது தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வரும் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாட வீட்டிற்கு வருவதாக ஹ்ருதிக் ரெட்டி தனது பெற்றோரிடம் உறுதியளித்திருந்தார். மகனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்த பெற்றோருக்கு, புத்தாண்டு தினத்தில் வந்த அவரது மரணச் செய்தி இடியாக இறங்கியுள்ளது. கடந்த மாதம் இதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சஹாஜா ரெட்டி அமெரிக்காவில் நடந்த தீ விபத்தில் பலியான நிலையில், தற்போது மற்றொரு மாணவர் பலியாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து ஜெர்மனி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், ஹ்ருதிக் ரெட்டியின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் தெலங்கானாவில் தீராத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
