நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்… இந்திய அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. தொடக்க ஒருநாள் போட்டி ஜனவரி 11-ம் தேதி வதோதராவில் நடக்கிறது.
🚨 News 🚨
— BCCI (@BCCI) January 3, 2026
India’s squad for @IDFCFIRSTBank ODI series against New Zealand announced.
Details ▶️ https://t.co/Qpn22XBAPq#TeamIndia | #INDvNZ pic.twitter.com/8Qp2WXPS5P
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணியை ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்துகிறார். ஷ்ரேயாஸ் ஐயர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
