50% வரி தாக்கம்… இந்திய ஜவுளித் துறை முடங்கும் அபாயம்!
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத இறக்குமதி வரியால் இந்திய ஆடைத் துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த வரி உயர்வால் ஏற்றுமதி ஆர்டர்கள் தொடர்ச்சியாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஆர்டர்கள் குறைவதால் பல ஆடை ஆலைகள் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் சூழலும் உருவாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால் ஏற்றுமதி துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்த பிரச்சினையை உடனடியாக கவனத்தில் எடுத்து தீர்வு காண வேண்டும் என ஒன்றிய அரசுக்கு AEPC வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக துணை குடியரசுத் தலைவருக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் தலையிட்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
