அமெரிக்காவில் பயங்கரம்: இந்திய வம்சாவளிப் பெண் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை - அலமாரியில் ஒளிந்தபடி தப்பித்த சிறுவர்கள்!
அட்லாண்டா நகரில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், மூன்று சிறுவர்கள் அலமாரியில் ஒளிந்தபடி மயிரிழையில் உயிர் தப்பிய விபரம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், அட்லாண்டா நகரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜயகுமார் (51) என்பவரது இல்லம். குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் உச்சகட்டமாக, விஜயகுமார் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் விஜயகுமாரின் மனைவி மீனா டோக்ரா (43), மற்றும் உறவினர்களான கவுரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் அந்த வீட்டுக்குள் 3 சிறுவர்கள் இருந்துள்ளனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுவர்கள், சமயோசிதமாக ஒரு அலமாரிக்குள் ஒளிந்து தங்களைக் காத்துக் கொண்டனர். அவர்களில் ஒரு சிறுவன் 911 என்ற அவசர எண்ணிற்குத் தகவல் அளித்ததன் பேரில் போலீசார் விரைந்து சென்று குழந்தைகளை மீட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
