ஈரானில் பதற்றநிலை... இருப்பிடங்களை விட்டு வெளியே வராதீங்க... இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Jun 13, 2025, 12:56 IST
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரானின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசித்து வரும் அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அவசிய தேவைகள் எதுவுமின்றி குடியிருக்கும் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டாம், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
