மேற்காசியா பதற்றம்…58 விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்பு!
மேற்காசியா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மார்ச் 4ஆம் தேதி மட்டும் மொத்தம் 58 விமானங்கள் இயக்கப்படுகின்றன. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து தேவைக்கேற்ப சேவைகள் அதிகரிக்கப்படுகின்றன. பாதுகாப்பாக இந்தியர்களை திரும்ப கொண்டு வர முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது.
இதில் இண்டிகோ 30 விமானங்கள் இயக்குகிறது. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணைந்து 23 விமானங்களை இயக்குகின்றன. இந்தியா மற்றும் வளைகுடா நாடுகள் இடையே சிறப்பு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பே முதன்மை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய விமானத் துறை கள நிலவரத்துக்கு ஏற்ப தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன என்று கூறியுள்ளது. தேவையான இடங்களில் கூடுதல் சேவைகளும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் தங்கள் விவரங்களை அதிகாரிகளிடம் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கை முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
