சீறிப் பாய்ந்தது இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட்! அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!

 
ஹைபிரிட் ராக்கெட்

சூப்பரான நியூஸ் தான். அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 150 சிறிய ரக செயற்கை கொள்களுடன் இன்று காலை சென்னையில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட். 

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023, திட்டத்தின் ஒரு பகுதியாக  செங்கல்பட்டு மாவட்டம் பட்டிப்புலம் கிராமத்தில் இருந்து ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. நாடு முழுவதும் 3,500 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறியரக செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. 

விண்ணில் ஏவப்பட்ட மறு பயன்பாட்டு ராக்கெட் மாணவர்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் வானிலை, வளிமண்டல நிலை கதிர்வீச்சு தன்மை குறித்த ஆராய்ச்சி தகவலை பெறலாம்.

ஹைபிரிட் ராக்கெட்

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கூறுகையில், செயற்கைக்கோள் புரட்சி ஏற்பட்டுள்ளது பொறியாளர்களை பள்ளியிலேயே உருவாக்க வேண்டும். செயற்கைக்கோளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, என கூறினார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்றார்.

ஹைபிரிட் ராக்கெட்

மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனங்களுடன் இணைந்து ஏபிஜே அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் 2023 செயல்படுத்தப்பட உள்ளது. கடல் மட்டத்திலிருந்து ஐந்து முதல் ஆறு கிலோமீட்டர் தூரம் வரை ஹைபிரிட் வகை ராக்கெட்டுகளை பயன்படுத்தி செயற்கைக்கோள்ஏவப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web