இந்தியாவின் முதல் உள்நாட்டு கப்பல் 'சமுத்ரா பிரதாப்'... இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் ராஜ்நாத் சிங்... கடல் மாசுக்கு 'செக்'!
இந்தியக் கடல் எல்லையில் ஏற்படும் எண்ணெய் கசிவுகள் மற்றும் ரசாயன மாசுபாடுகளைக் கையாளுவதற்காகத் தயாரிக்கப்பட்ட பிரத்யேகக் கப்பலான 'சமுத்ரா பிரதாப்', இன்று முதல் தனது பணியைத் தொடங்குகிறது.
இந்தக் கப்பல் கோவா கப்பல் கட்டும் தளத்தில் (Goa Shipyard Limited) அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் கட்டப் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இது 'தற்சார்பு இந்தியா' (Atmanirbhar Bharat) திட்டத்திற்குப் பெரும் வலுசேர்க்கிறது.

114.5 மீட்டர் நீளமும், 4,200 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பல், ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 6,000 கடல் மைல் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டது. ஆயில் பிங்கர் பிரின்டிங் (Oil Fingerprinting) இயந்திரம், ரசாயனக் கண்டுபிடிப்பு கருவிகள், அதிநவீன தீயணைப்பு மற்றும் மாசு அகற்றும் சாதனங்கள்.
கடலில் எதிர்பாராத விதமாக ஏற்படும் எண்ணெய் கசிவுகளை (Oil Spills) உடனடியாகக் கண்டறிந்து, அவற்றை அகற்ற இக்கப்பல் உதவும். கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதிலும், கடல்சார் அவசர நிலைகளை எதிர்கொள்வதிலும் இந்தியக் கடலோரக் காவல் படைக்கு இது ஒரு "கேம் சேஞ்சராக" (Game Changer) அமையும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம், சுமார் ₹583 கோடி மதிப்பீட்டில் இரண்டு மாசு கட்டுப்பாட்டுக் கப்பல்களைக் கட்டுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது முதல் கப்பலான சமுத்ரா பிரதாப் பயன்பாட்டிற்கு வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
