தமிழகத்தில் ரூ.10,000 கோடி முதலீட்டில் இந்தியாவின் முதல் 'சவரன் ஏ.ஐ. பூங்கா'!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், பெங்களூருவைச் சேர்ந்த 'சர்வம் ஏ.ஐ.' நிறுவனத்துடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகமே செயற்கை நுண்ணறிவு (AI) மயமாகி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கெனத் தனித்துவமான, பாதுகாப்பான ஒரு ஏ.ஐ. கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம்.
இந்தியாவில் முதன்முறையாகச் சென்னையில் அமைக்கப்பட உள்ள இந்தத் தரவு மையம், தமிழக அரசின் தரவுகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கொடுக்காமல், மாநிலத்தின் எல்லைக்குள்ளேயே பாதுகாப்பாகச் சேமித்து வைக்க உதவும்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் தொகை முதலீடு செய்யப்படும். இதன் மூலம் 1,000 பேருக்கு உயர் தொழில்நுட்பம் சார்ந்த (Deep-Tech) வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பழங்காலத் தமிழ் இலக்கியச் சொற்களையும் நவீன டிஜிட்டல் பயன்பாடுகளையும் இணைக்கும் வகையில், 'தமிழ் மொழிக்கான பிரத்யேக ஏ.ஐ. மாடல்களை' இந்த மையம் உருவாக்கும்.
ஐஐடி மெட்ராஸ் பங்களிப்பு: சென்னை ஐஐடி-யுடன் இணைந்து செயல்படும் இந்தத் திட்டம், மாணவர்களை ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களாக மட்டுமின்றி, உருவாக்குபவர்களாகவும் மாற்றும் என இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். விவசாயம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசுச் சேவைகளை மக்களுக்கு வேகமாகவும் துல்லியமாகவும் கொண்டு செல்ல இந்தத் தொழில்நுட்பம் பயன்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
