இந்தியர்களின் மாஸ் சாதனை... அமெரிக்க அரசின் சலுகை பெறும் 120 நாடுகள் பட்டியல் இந்தியா மிஸ்ஸிங்!

 
இந்தியாவில் சிஏஏ சட்டம் அமலாவது கவலையளிக்கிறது... நிலைமையை கண்காணித்து வருவதாக அமெரிக்கா தகவல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், அமெரிக்காவில் குடியேறியவர்கள் அந்நாட்டு அரசின் நலத்திட்ட உதவிகளை எந்த அளவில் பயன்படுத்துகின்றனர் என்பது குறித்த 120 நாடுகளின் பட்டியலை வெளியிட்டார்.

இந்த ஆய்வில், அமெரிக்காவிற்குச் சுமையாக இருக்கும் நாடுகளைக் குறிப்பிடும் வகையில் தரவுகள் பகிரப்பட்டன. பூடான் (81.4%), ஏமன் (75.2%), சோமாலியா (71.9%) ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.

அமெரிக்கா

இந்தியாவின் அண்டை நாடுகளான வங்கதேசம் (54.8%), பாகிஸ்தான் (40.2%), நேபாளம் (34.8%) மற்றும் சீனா (32.9%) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் அமெரிக்க அரசின் சலுகைகளை நாடுகின்றனர். 120 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயர் எங்கேயும் இடம்பெறவில்லை.

இதற்கு ஆய்வாளர்கள் கூறும் முக்கியக் காரணங்கள், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் 1,51,200 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.36 கோடி). இது அமெரிக்கர்களின் சராசரி வருமானத்தை விட இரு மடங்கு அதிகம். 2023-ம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியர்கள் மிகக் குறைந்த அளவிலேயே (சுமார் 25% க்கும் குறைவானவர்கள்) அரசின் இலவச மருத்துவக் காப்பீடு அல்லது உணவுச் சலுகைகளைப் பயன்படுத்துகின்றனர்.

எச்1-பி' விசா அறிவிப்பு அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் பொறியியல் போன்ற உயர்மட்டப் பணிகளில் உள்ளனர். இவர்கள் அரசுக்கு வரி செலுத்துபவர்களாக இருக்கிறார்களே தவிர, அரசின் சலுகைகளை எதிர்பார்ப்பவர்களாக இல்லை.

அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்யும் திறமையான குடியேறிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே டிரம்பின் கொள்கை. அந்த வகையில், இந்தியர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்திற்குச் சுமையாக மாறாமல், அதன் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்வதை இந்தப் புள்ளிவிவரம் உறுதிப்படுத்துகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!