இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையர்... யார் இந்த ஞானேஸ்குமார்?!

 
ஞானேஷ் குமார்

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக இன்று ஞானேஸ்குமார் பதவியேற்கிறார். இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக பதவி வகித்து வந்த ராஜீவ் குமாருக்கு 65 வயது நிரம்பியதால் நேற்றுடன் அவர் பணி ஓய்வு பெற்றார். தேர்தல் கமிஷனர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் பதவி வகித்து வந்தனர். 

ராஜீவ் குமாரின் ஓய்வையயடுத்து புதிய தலைமை தேர்தல் கமிஷனரை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தலைமை தேர்தல் கமிஷனர் பதவிக்கு 5 பேர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு, அதில் ஞானேஷ்குமார் பெயர் இறுதி செய்யப்பட்டதாகவும், அது தொடர்பான பரிந்துரையை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமாரை நியமித்து உத்தரவிட்டார்.

ராஜீவ் குமார் தலைமை தேர்தல் ஆணையர்

இந்நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் இன்று முறைப்படி பதவியேற்கிறார். இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் வரும் 2029ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஞானேஸ்குமார்?

1988வது பேட்ச் கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ்குமார், கேரள மாநில நிதித் துறை, பொதுப் பணித் துறைகளின் செயலாளர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

ஞானேஷ்குமார்

இதனைத் தொடர்ந்து மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட ஞானேஷ் குமார், மத்திய உள் துறை, பாதுகாப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரத் துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி உள்ளார்.

கடந்த ஜனவரி 31ம் தேதியுடன் பணிஓய்வு பெற்ற நிலையில், அவர் தலைமை தேர்தல் ஆணையராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் 1989வது பேட்ச் ஹரியானா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web