இந்தியா சாதனை... நீருக்கடியில் இருந்து பாய்ந்து 3,500 கி.மீ. இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி!

 
நீருக்கடியில் இருந்து ஏவுகணை

இந்தியக் கடற்படையின் பலத்தை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் வகையில், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் 'K-4' பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். அரிகாட் மூலம் நீருக்கடியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை மிகத் துல்லியமாகத் தாக்கியதாகப் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது சுமார் 3,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. நீருக்கடியில் இருந்தே அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரி நாடுகளின் ரேடார்களில் சிக்காமல், கடலுக்கு அடியில் இருந்து மறைந்திருந்து தாக்குதல் நடத்த இது இந்தியக் கடற்படைக்குப் பேருதவியாக இருக்கும்.

உலக அரங்கில் இந்தியா:

இந்தச் சோதனையின் வெற்றியின் மூலம், நிலம், வான் மற்றும் நீருக்கடியில் என மூன்று தளங்களில் இருந்தும் அணு ஆயுதங்களை ஏவும் திறன் கொண்ட (Nuclear Triad) மிகச்சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் பாதுகாப்புத் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதை இது காட்டுகிறது.

இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையான "முதலில் பயன்படுத்த மாட்டோம்" என்ற அடிப்படையில், எதிரி நாடுகள் ஒருவேளை தாக்குதல் நடத்தினால், கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் பதில் தாக்குதல் நடத்த இந்த K-4 ஏவுகணைகள் இந்தியாவிற்கு ஒரு 'தற்காப்புக் கவசமாக' விளங்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!