இந்தியா அதிர்ச்சி தோல்வி... தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது தென் ஆப்பிரிக்கா!
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்தியப் பந்துவீச்சாளர்கள் டி காக் (6), மார்க்ரம் (4) போன்ற முக்கிய வீரர்களை வெளியேற்றினர். தென் ஆப்பிரிக்கா 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Post Match Selfie Reaction. 🤳
— Proteas Men (@ProteasMenCSA) February 22, 2026
David Miller reflects on today’s performance after delivering a match-winning display in a dominant victory for #TheProteas. 😎🇿🇦#Unbreakable #T20WorldCup pic.twitter.com/yP6YOMwF1S
இக்கட்டான நிலையில் கைக்கோர்த்த டேவிட் மில்லர் (63 ரன்கள்) மற்றும் பிரேவிஸ் (45 ரன்கள்) ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இறுதியில் ஸ்டப்ஸ் (44) அதிரடி காட்ட, தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 187 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே பேரிடியாக அமைந்தது. இஷான் கிஷன், திலக் வர்மா, அபிஷேக் சர்மா என முன்னணி வீரர்கள் 51 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். நட்சத்திர வீரர்களான சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங் ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஷிவம் துபே மட்டும் சற்று போராடி 42 ரன்கள் சேர்த்தார்.

தென் ஆப்பிரிக்காவின் மார்கோ யான்சென் 4 விக்கெட்டுகளைச் சாய்த்து இந்திய அணியைச் சுருட்டினார். இறுதியில் இந்தியா 18.4 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தத் தொடரில் இந்திய அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும்.
இந்தத் தோல்வி சூப்பர் 8 சுற்றில் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பைப் பாதிக்குமா? அல்லது அடுத்த போட்டிகளில் மீண்டு வர வாய்ப்புள்ளதா என்பது குறித்து விளையாட்டு விமர்சகர்கள் விவாதித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
