இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்... அவசர அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கம்!
சவுதி அரேபியாவின் மதீனாவில் இருந்து ஐதராபாத் நோக்கி புறப்பட்டிருந்த இண்டிகோ விமானத்திற்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தரைக்கட்டுப்பாட்டு அறை விமானிக்கு தகவல் அளித்ததும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானத்தை அருகிலிருந்த அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டு, மதியம் 12.30 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
👉🏽 Follow @LogicalIndians
— The Logical Indian (@LogicalIndians) December 4, 2025
An IndiGo flight from Madinah to Hyderabad made a safe emergency landing in Ahmedabad after a bomb threat.#IndiGo #EmergencyLanding #AviationSafety #AhmedabadAirport #BombThreathttps://t.co/qruY1dbHpS
விமானம் தரையிறங்கியவுடன் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் முழுவதும் விரிவான சோதனை நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு போலீசார், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விமான நிலையத்தில் பாதுகாப்பு கண்காணிப்பை வலுப்படுத்தினர்.

சோதனையின் முடிவில், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
