இண்டிகோ சேவையில் 130 விமானங்கள் குறைப்பு... பயணிகள் அதிர்ச்சி !

 
இண்டிகோ

புதிய ஓய்வு விதிகள் அமலுக்கு வந்ததன் விளைவாக விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால், டிசம்பர் தொடக்கத்தில் இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 3, 4, 5 ஆகிய தேதிகளில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்தாகி, பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். தற்போது சேவை ஓரளவு சீரடைந்துள்ள நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்பிலான பயணக் கூப்பன் வழங்கப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது.

இண்டிகோ

இதனிடையே, விமான ரத்துகள் மற்றும் சேவை குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடத்திய குழு, தனது அறிக்கையை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ-விடம் சமர்ப்பித்துள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களை கட்டுப்படுத்த, மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க 10 சதவீத சேவையை குறைக்க டிஜிசிஏ உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும் 94 வழித்தடங்களில் நாளுக்கு 130 விமான சேவைகளை இண்டிகோ குறைத்துள்ளது.

இண்டிகோ

இந்த சேவை குறைப்பில் பெங்களூரு நகரமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஐதராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் நகரங்களில் விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் எந்த மாற்றமும் இல்லை. மும்பையில் வருகை மற்றும் புறப்பாடு என இரண்டு விமானங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு நாட்களில் அட்டவணை மாற்றங்கள் சற்று மாறுபடலாம் என்றும் இண்டிகோ விளக்கம் அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!