இண்டிகோ விமான தாமதம் – ரத்து: பயணிகளுக்கு ரூ.10,000 பயணக் கூப்பன் !
இண்டிகோ விமான ரத்துகள் மற்றும் நீண்ட தாமதங்களால் கடந்த 10 நாட்களாக பயணிகள் கடும் அவதி அனுபவித்து வருகின்றனர். விமானிகளுக்கான புதிய ஓய்வுவிதிகள் காரணமாக ஏற்பட்ட பணியாளர் பற்றாக்குறையே இந்த சிக்கலுக்கு காரணமாகியுள்ளது. விமான சேவைகள் சீராக்கப்படுகின்றன என்று டிஜிசிஏ அறிவித்த நிலையில், இண்டிகோவில் 5% சேவை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நிவாரணமாக இண்டிகோ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 3 முதல் 5 வரை தாமதமோ ரத்தோ செய்யப்பட்ட விமானங்களின் பயணிகள் அனைவருக்கும் ரூ.10,000 மதிப்புள்ள பயணக் கூப்பன் வழங்கப்படும். இது, டிஜிசிஏ விதிமுறைகளின் கீழ் கிடைக்க வேண்டிய பணத் திருப்புதலுக்கு கூடுதலாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த கூப்பன் 12 மாதங்கள் வரை பயன்படுத்தக்கூடியது.

மேலும், விமானம் புறப்படும் நேரத்துக்கு 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்யப்பட்டிருந்தால், அந்த பயண நேரத்தைப் பொறுத்து ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது. பயணிகளின் சிரமத்தை ஒப்புக்கொண்ட இண்டிகோ, சேவையை விரைவில் முழுமையாக சீராக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் கூறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
