இண்டிகோ விமானம் நடுவானில் பழுது… கொச்சியில் அவசர அவசரமாக தரையிறக்கம்!

 
இண்டிகோ
சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இதில் 160 பயணிகள் பயணித்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென லேண்டிங் கியர் மற்றும் டயரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இண்டிகோ

உடனே விமானி விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவசர தரையிறக்க அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்ததும், விமானம் கொச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இண்டிகோ

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், தகவல் கிடைத்தவுடன் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது என்றனர். காலை 9.07 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஆய்வில், விமானத்தின் வலது பக்கத்தில் உள்ள இரண்டு டயர்கள் வெடித்திருந்தது தெரியவந்தது. பழுதை சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!