70க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து... !
பெங்களூரு மற்றும் மும்பை விமான நிலையங்களை மையமாகக் கொண்டு இயக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் புதன்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதியில் சிக்கினர். தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் விமான நிலைய போக்குவரத்து நெரிசல்தான் காரணம் என இண்டிகோ விளக்கமளித்திருந்தாலும், உண்மையில் ஊழியர்கள் பற்றாக்குறை முக்கிய காரணமாக இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அமல்படுத்திய புதிய விமானிகளின் கடமை நேர வரம்பு விதிமுறைகள் காரணமாக, பைலட்டுகள் மற்றும் பணிப்பெண்களுக்கு ஓய்வு நேரம் வழங்க வேண்டிய சூழல் உருவாகி, இண்டிகோவில் ஊழியர்களின் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே விமான இயக்கம் தடுமாறி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் பிரச்சனை உச்சம் தொட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக தரவுகளின்படி, செவ்வாய்க்கிழமை மட்டும் இண்டிகோவின் 65% விமானங்கள் நேரத்திற்கு இயக்கப்படவில்லை. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் போன்ற நிறுவனங்களும் தாமத பிரச்னையை சந்தித்துள்ளன. தொடர்ந்து ரத்தாகும் விமானங்கள் காரணமாக பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் கடும் சிரமத்தில் உள்ளனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
