இண்டிகோ விமானச் சேவை டிசம்பர் 10க்குள் சீராகும் - நிறுவனம் அறிவிப்பு!

 
இண்டிகோ

விமானப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் சேவைகள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘விமானப் பணி நேரம் மற்றும் ஓய்வு விதிகள்’ (FDTL) காரணமாக விமானிகள் மற்றும் விமானப் பணிப்பெண்களுக்குக் கட்டாய ஓய்வு நேரம் அளிக்க வேண்டியுள்ளது. இண்டிகோ நிறுவனத்தில் போதுமான விமானிகளின் எண்ணிக்கை இல்லாததால், கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டும், ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதப்படுத்தப்பட்டும் வருகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் சுமார் 750 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இண்டிகோ

டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் கடந்த 6 நாட்களாகச் சென்னையில் முடங்கியுள்ள நிலையில், விமானச் சேவை எப்போது சீராகும் என்று இண்டிகோ நிறுவனம் உரிய முறையில் ஆன்லைனிலோ, மின்னஞ்சலிலோ பதில் அளிப்பதில்லை என்றும், நேரடியாக விசாரிப்பதற்குப் போதுமான பணியாளர்கள் இல்லை என்றும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இண்டிகோ

இந்நிலையில், இண்டிகோ விமானச் சேவைகள் டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, சேவைகள் முழுமையாகச் சரியாக 2026 பிப்ரவரி 10 வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விரைவில் சரியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, பயணிகளுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!