இண்டிகோவுக்கு ரூ.22 கோடி அபராதம்… துணைத் தலைவர் நீக்கம்!
டிசம்பர் 2025-ல் இண்டிகோ விமான நிறுவனம் மேற்கொண்ட தொடர் விமான ரத்துகள் குறித்து மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பதிலளித்துள்ளது. விதிமுறைகளை மீறியதற்காக இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.22.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த மாதத்தில் மட்டும் 6,890 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலாண்மை குறைபாடு, மென்பொருள் சிக்கல், செயல்பாட்டு குளறுபடி மற்றும் மோசமான வானிலை ஆகியவை காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதையடுத்து டிஜிசிஏ அதிரடி நடவடிக்கை எடுத்தது.

எதிர்காலத்தில் விதிமுறை மீறல் நடக்காமல் இருக்க ரூ.50 கோடி வங்கி உத்தரவாதம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போதிய திட்டமிடல் இல்லாததால் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரை பதவியிலிருந்து நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 10, 2026க்கு பிறகு தேவையான விமானிகள் மற்றும் பணியாளர்கள் இருப்பார்கள் என இண்டிகோ அரசு தரப்புக்கு உறுதி அளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
