இண்டிகோ சிஇஓ திடீர் பதவி விலகல்... ராகுல் பாட்டியா இடைக்கால பொறுப்பு!

 
இண்டிகோ இண்டிகோ

விமான சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  பீட்டர்ஸ் எல்பர்ஸ்  தனது பதவியை இன்று (மார்ச் 10) ராஜிநாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் விமான சேவை ரத்து உட்பட   செயல்பாட்டு சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது ராஜிநாமாவைத் தொடர்ந்து நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரான ராகுல் பாட்டியா இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். விமான போக்குவரத்து அமைச்சகத்தின் தொடர் விசாரணைகளுக்குப் பிறகு இந்த ராஜிநாமா அறிவிக்கப்பட்டுள்ளது.

 இன்டர்குளோப் நிறுவனத் தலைவர் விக்ரம் சிங் மேத்தா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு  வரும் இண்டிகோவில் சேவைகளை சீரமைத்து பயணிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிறுவனத் தலைவர் விக்ரம் சிங் மேத்தா தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் ராகுல் பாட்டியா பணியாற்றுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!