தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜன் காலமானார்!
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் மதுரையில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். அவருக்கு வயது 66. இவர் தனது அபாரமான எழுத்தாற்றல் மூலம் தமிழ் வாசகர்களை கட்டிப்போட்டவர். இந்திரா சௌந்திர்ராஜனின் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாக அமைந்துள்ளது.
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் சேலத்தினை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது இயற்பெயர் சௌந்தர்ராஜன். மதுரையில் உள்ள டிவிஎஸ் நகர்ப் பகுதியில் வசித்து வந்தார். டிவிஎஸ் நிறுவனத்தில் துணைப் பொறியாளராகப் பணிபுரிந்தவர். எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது தாயின் பெயரான இந்திரா எனும் பெயரை தனது பெயருடன் இணைத்து இந்திரா சௌந்தர்ராஜன் எனும் பெயரில் கதைகளை எழுதி வந்தார்.
இந்திரா சௌந்தர்ராஜனின் ‘ஒன்றின் நிறம் இரண்டு’ என்ற கதை 1978 ம் ஆண்டு கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வென்றது. ‘என் பெயர் ரங்கநாயகி’ எனும் கதை தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ம் ஆண்டுக்கான சிறந்த நூலிக்கான மூன்றாம் பரிசினைப் பெற்றது. இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த எழுத்தாளர் விருதினையும், இன்னும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது கதை வசனத்தில் 2007ல் வெளியான சிருங்காரம் எனும் திரைப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது.
அவரது படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வந்துள்ளன. என் பெயர் ரங்கநாயகி, மர்ம தேசம் போன்ற படைப்புகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. அவரது எழுத்தில் 3000க்கும் மேற்பட்ட எபிசோடுகளை எழுதியுள்ளதாக 2011 ம் ஆண்டு அளித்த அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இவரது எழுத்தில் வெளிவந்த அத்திப்பூக்கள் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது .
இந்திரா சௌந்தர்ராஜன் எழுத வந்த காலக்கட்டத்தில் மர்மக் கதைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்த காலக்கட்டம். சரித்திரம், ஆன்மீகம், அமானுஷ்ங்களது பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். இக்கதைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆன்மீக சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பல தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன.
இந்திரா சௌந்திரராஜன் நேற்று மதுரையில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். இந்திரா சௌந்தர்ராஜனின் திடீர் மறைவு எழுத்துலகிலும் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு உரிய மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. நவம்பர் 13ம் தேதி அவரது பிறந்தநாள் வரும் நிலையில் நவம்பர் 10ம் தேதியான இன்று அவர் மறைந்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!